கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு!

கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு!

புதுச்சேறியில் கோவிட் பணியில் இருந்த அரசு ஊழியர்கள், கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் 5 பேருக்கு மருத்துவ இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. குறிப்பாக கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது முன்களப்பணியாளர்கள் ஏராளமானோர் கோவிட் பாதித்து உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு!

இந்நிலையில் நீட் தேர்வில் தகுதி பெற்று கோவிட் தொற்றால் உயிரிழந்த அரசு பணியாளர்களின் பிள்ளைகள் வரும் 21 ஆம் தேதிக்குள் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித்துறை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.