கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சென்னையை மீட்க அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்.. புதிய திட்டம் தொடக்கம்!

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சென்னையை மீட்க அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்.. புதிய திட்டம் தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மைக்ரோ ப்ளான் என்ற பெயரில் 9 திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சென்னையை மீட்க அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்.. புதிய திட்டம் தொடக்கம்!

அதில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், உரிய மருத்துவ சிகிச்சை, வீடு வீடாக பரிசோதனை மக்களிடையே விழுப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும். இதனை தீவிரமாக செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ அலுவலரும் உதவி பொறியாளரும் நியமிக்கப்பட்டு, அந்த வார்டில் இருக்கும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்கவும் மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி தென்பட்டால் உடனே அவர்களை சிறப்பு முகாம்களில் வைத்து கண்காணிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் முதியவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.