‘குடியரசு தினம்’ சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முக்கிய தகவல் இதோ!

 

‘குடியரசு தினம்’ சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முக்கிய தகவல் இதோ!

ஜன.26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் ஜன.20,22,24 மற்றும் 26 ஆகிய 4 நாட்களிலும் காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜன.26 உள்ளிட்ட 4 நாட்களில் காலை 6 முதல் 10 மணி வரை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகே தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

‘குடியரசு தினம்’ சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முக்கிய தகவல் இதோ!

மேலும், வாலாஜா பாயிண்ட் , அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி 20,22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடைபெறவிருப்பதாலும், குடியரசு தினத்தன்று நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாலும் போக்குவரத்து இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலே இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.