அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர் மருந்து’ கொள்ளை… பரபரப்பு புகார்!

 

அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர் மருந்து’ கொள்ளை… பரபரப்பு புகார்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர் மருந்து’ கொள்ளை… பரபரப்பு புகார்!

கள்ளச்சந்தையில் ரூபாய் 40 ஆயிரத்துக்கும் மேல் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. முதல் 5 நாட்களிலேயே ரூபாய் 1.80 கோடி அளவுக்கு விற்பனை நடந்ததாக சுகாதாரத்துறை அறிவித்தது. இதனிடையே, ரெம்டெசிவிர் மருந்துகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர் மருந்து’ கொள்ளை… பரபரப்பு புகார்!

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.