பெங்களூரு மெட்ரோ பெயர் பலகையிலிருந்து இந்தியை நீக்க வேண்டும்! – கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தல்

பெங்களூரு மெட்ரோ பெயர் பலகையிலிருந்து இந்தியை நீக்க வேண்டும்! – கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தல்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம் பெற்றுள்ள இந்தி பெயர் பலகையை நீக்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ பெயர் பலகையிலிருந்து இந்தியை நீக்க வேண்டும்! – கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தல்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியை நீக்கிவிட்டு கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே வைக்க வேண்டும். பெங்களூரு மெட்ரோவில் கீழ்நிலைப் பணிகளில் கன்னடர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையம் கூறியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ பெயர் பலகையிலிருந்து இந்தியை நீக்க வேண்டும்! – கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தல்

பெங்களூரு மெட்ரோவில் கன்னடம் பயன்படுத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கன்னட வளர்ச்சிக் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் நாகப்ஹரனா கூறுகையில்,

பெங்களூரு மெட்ரோ பெயர் பலகையிலிருந்து இந்தியை நீக்க வேண்டும்! – கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தல்

“மெட்ரோ ரயில் பெயர் பலகையில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இந்தியை பெயர் பலகையில் இருந்து அகற்ற வேண்டும். இந்தி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றால் இதர 22 அலுவல் மொழிகளும் இடம் பெற வேண்டும். இந்திக்கு இடம் என்றால் நம் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மொழிகளுக்கு இடம் கொடுக்கலாமே. இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் இங்கே வசிக்கிறார்கள். அவர்களின் மொழிக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கலாமே?

பெங்களூரு மெட்ரோ பெயர் பலகையிலிருந்து இந்தியை நீக்க வேண்டும்! – கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தல்

எனவே பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்துக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் இரண்டு வாய்ப்புகளை கொடுத்துள்ளது. ஒன்று பெயர் பலகையில் இருந்து இந்தியை அகற்ற வேண்டும். அல்லது 22 அலுவல் மொழிகளிலும் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும்” என்றார்.
கன்னட வளர்ச்சிக் ஆணையத்தின் பரிந்துரை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று பெங்களூரு மெட்ரோ நிர்வாக இயக்குநர் அஜய் சேத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நவம்பருக்குள் அறிக்கை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.