வெறுப்பை தூண்டும் டிக்டாக் வீடியோக்கள் – லட்சக் கணக்கில் நீக்கம்

 

வெறுப்பை தூண்டும் டிக்டாக் வீடியோக்கள் – லட்சக் கணக்கில் நீக்கம்

டிக்டாக் எனும் ஆப் பலரின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தனக்குப் பிடித்த நடிகர்களின் பாடலை, டான்ஸை சோஷியல் மீடியால் ஷேர் செய்துகொண்டிருந்த ரசிகர்கள், தாங்களே பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும் வாய்ப்பை அளித்தது டிக்டாக்.

டிக்டாக் உலகின் குக்கிராமங்கள் வரை ஆதிக்கம் செலுத்தியது. டிக்டாக் செலிபிரிட்டிகள் உருவாகின்றன. அவர்கள் வெள்ளித் திரையில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன.

வெறுப்பை தூண்டும் டிக்டாக் வீடியோக்கள் – லட்சக் கணக்கில் நீக்கம்

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லையில் சிக்கல் எழுந்தது. சீன நிறுவனத்தின் ஆப்தான் டிக்டாக். அதனால், 50க்கும் மேற்பட்ட ஆப்கள் இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று டிக்டாக்.

அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக் தடைசெய்யப்பட விருக்கிறது என்ற தகவல் வெளியானது. பயனளார்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வில்லை. சீன நிறுவனங்களுக்கு அந்த தகவல்களை அளிக்கிறது என்ற குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அமெரிக்காவின் இந்தத் தடை முடிவுக்கு ரஷ்ய தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆயினும் அமெரிக்கா தன் முடிவில் பின்வாங்க வில்லை.

வெறுப்பை தூண்டும் டிக்டாக் வீடியோக்கள் – லட்சக் கணக்கில் நீக்கம்

பைட் டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் ஆப்தான் டிக்டாக். அது தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ‘அமெரிக்காவில் வெறுப்பு உணர்வைத் தூண்டு வீடியோக்களை இந்த ஆண்டில் 3,80,00 வீடியோக்களையும் 1000 க்கும் மேற்பட்ட போஸ்ட்டுகளையும் நீக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளது.