குப்பையில் கிடந்த ரெம்டெசிவர் மருந்து… அதிர்ச்சியூட்டும் வீடியோ!

 

குப்பையில் கிடந்த ரெம்டெசிவர் மருந்து… அதிர்ச்சியூட்டும் வீடியோ!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து கொடுக்கப்படும் நிலையில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் அந்த மருந்து அதிக விலைக்கு விற்கப்பட்டதால், சென்னையில் ரெம்டெசிவர் விற்பனையை தொடங்கியது தமிழ அரசு. ஒரே ஒரு இடத்தில் விற்கப்பட்டதால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குப்பையில் கிடந்த ரெம்டெசிவர் மருந்து… அதிர்ச்சியூட்டும் வீடியோ!

இதைக் கருத்தில் கொண்டு திருச்சி, கோவை, சேலம் உட்பட 5 இடங்களில் ரெம்டெசிவர் விற்பனை மையம் தொடங்கப்பட்டது. மையங்கள் அதிகரிக்கப்பட்டாலும், மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மருந்து கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து குப்பைத் தொட்டியில் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெம்டெசிவர் மருந்தை விற்பனை மையத்தில் இருந்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அதை கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

இதை அங்கிருந்த நோயாளி ஒருவரின் உறவினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த மருந்துக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டிருக்கும் சூழலில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.