சென்னையில் ரெம்டெசிவிர் வாங்க குவியும் மக்கள்… கோடிக் கணக்கில் விற்பனை!

 

சென்னையில் ரெம்டெசிவிர் வாங்க குவியும் மக்கள்… கோடிக் கணக்கில் விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் தாக்கப்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த மருந்து கொடுக்கப்படுகிறது. சென்னையில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

சென்னையில் ரெம்டெசிவிர் வாங்க குவியும் மக்கள்… கோடிக் கணக்கில் விற்பனை!

இதைத் தடுக்கும் வண்ணம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் ரெம்டெசிவிர் விற்பனையை தொடங்கியது. நோயாளிகளின் உறவினர்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். உறவினர்களின் உயிர்களை காப்பாற்ற அதிகாலை முதலே வரிசையில் காத்து கிடப்பதாகவும் மருந்து விற்பனை தாமதமாக நடப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் ரூ.1.88 கோடிக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 12 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.