‘குஜராத்தில்’ உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா : ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த மூவ்!

‘குஜராத்தில்’ உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா : ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த மூவ்!

தொலைதொடர்பில் நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்ட பிரபல ரிலையன்ஸ் நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் சுமார் 280 ஏக்கர் நிலத்தில் இந்த பூங்காவிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில், டிராகன்கள் நிலம், நீர்வாழ் இராஜ்யம் உள்ளிட்ட பல விலங்கினங்களுக்கான தனித்தனி பிரிவுகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘குஜராத்தில்’ உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா : ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த மூவ்!

அதோடு உலகம் முழுவதிலும் இருக்கும் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட 200 வகையான புதிய உயிரினங்கள் இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக குரைக்கும் மான், கொமோடோ டிராகன்கள், ரோஸி பெலிகன் உள்ளிட்டவையும் ஜாகுவார் மற்றும் ஆப்பிரிக்க சிங்கங்கள், ஆப்பிரிக்க யானைகளும் இடம்பெறுமாம். மேலும், 350 வகையான மீன்களும் பூங்காவில் வைக்கப்பட உள்ளதாம்.

‘குஜராத்தில்’ உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா : ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த மூவ்!

உலகிலேயே மிகப்பெரியதாக அமைக்கப்படும் இந்த உயிரியல் பூங்காவிற்கு “பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு பூங்கா” எனப் பெயரிடப்பட உள்ளதாகவும் அதற்கான அனைத்து அனுமதிகளும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இந்த பூங்கா கொரோனா பாதிப்பின் காரணமாக தாமதமானது. இனி எந்த தாமதமும் இல்லையெனில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் டைரக்டர் தெரிவித்திருக்கிறார்.

‘குஜராத்தில்’ உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா : ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த மூவ்!

உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜாரத்தில் அமைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவும் குஜராத்தில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தெரிவித்துள்ளது.