”ரூ. 5000க்கும் குறைவான விலையில் 5 ஜி ஃபோன்” – ஜியோ திட்டம் !

 

”ரூ. 5000க்கும் குறைவான விலையில் 5 ஜி ஃபோன்” – ஜியோ திட்டம் !

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 5ஜி சேவைகள் தொடங்ப்படவில்லை. அது தொடர்பாக அரசும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் விரைவில் 5ஜி சேவைகள் நாட்டில் தொடங்கப்படும் என்றும், தொலைத்தொடர்பு துறையில் அது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்ப்படும் நிலையில், அதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் திட்டமிட்டு, அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகின்றன.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி சேவைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 4ஜி சேவையில் கலக்கிய ஜியோ, குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தியது.

”ரூ. 5000க்கும் குறைவான விலையில் 5 ஜி ஃபோன்” – ஜியோ திட்டம் !

இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரை குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் கூறுகையில், படிப்படியாக விற்பனையை அதிகப்படுத்தி, அதன் மூலம் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரித்து, மேலும் 5ஜி போனின் விலையை 3 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு மேலும் குறைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடெங்கிலும் 2ஜி பயன்படுத்தும், 20 முதல் 30 கோடி வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு செயல்படவும் ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

”ரூ. 5000க்கும் குறைவான விலையில் 5 ஜி ஃபோன்” – ஜியோ திட்டம் !

தற்போதைய நிலவரப்படி, 5 ஜி ஸ்மார்ட்போன்கள் 27 ஆயிரம் ரூபாய் என்றளவில் தொடங்குகிறது. இதன் விலை வரும் மாதங்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜியோவின் இந்த திட்டம் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்