ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது அதன் பொற்காலத்தில் உள்ளது – முகேஷ் அம்பானி

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது அதன் பொற்காலத்தில் உள்ளது – முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது அதன் பொற்காலத்தில் உள்ளது என அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 31, 2020 நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகரக் கடன் ரூ.161,035 கோடியாக இருந்தது. இந்த நிலையில், ஜியோ இயங்குதளங்களுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டுள்ளது. பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி போன்ற நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது அதன் பொற்காலத்தில் உள்ளது – முகேஷ் அம்பானி

இதன் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது அதன் பொற்காலத்தில் இருப்பதாக அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஏனெனில் அந்நிறுவனம் தற்போது நிகர கடன் இல்லாததாக மாறிவிட்டதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தை நிகர கடனில்லாமல் செய்வதாக பங்குதாரர்களுக்கு, தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக முகேஷ் அம்பானி பெருமையுடன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.