தளர்வுகள் ஆபத்தாகிவிடக் கூடாது! – மக்களுக்கு கமல் அட்வைஸ்

 

தளர்வுகள் ஆபத்தாகிவிடக் கூடாது! – மக்களுக்கு கமல் அட்வைஸ்


ஊரடங்கு தளர்வுகளால் வெளியே வரும்போது அது நம் உயிருக்கும் உறவுகளுக்கும் ஆபத்தாகிவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மக்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

தளர்வுகள் ஆபத்தாகிவிடக் கூடாது! – மக்களுக்கு கமல் அட்வைஸ்


நாடு மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் அளவுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனாவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் மக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுவிட்டதே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

தளர்வுகள் ஆபத்தாகிவிடக் கூடாது! – மக்களுக்கு கமல் அட்வைஸ்

அப்படி அலட்சியமாக இருப்பது நம்முடைய உயிருக்கும் உறவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று பொது மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அட்வைஸ் செய்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். நாமே தீர்வு” என்று கூறியுள்ளார்.