தொடர் உடற்பயிற்சி சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்!

 

தொடர் உடற்பயிற்சி சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்!

தொடர் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகப்பெரிய அளவில் குறைகிறது என்று மீண்டும் ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பதை நாம் அறிவோம். உடல் ஃபிட்டாக இருக்க, நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க, நோய் பாதிப்பு கட்டுக்குள் இருக்க, மன அழுத்தம் தவிர்க்க என உடற்பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

தொடர் உடற்பயிற்சி சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்!

இந்த நிலையில் காற்று மாசு எந்த அளவுக்கு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்று அறிய ஐரோப்பிய சர்க்கரை நோய் தொடர்பான ஆய்வுக்கான கூட்டமைப்பு என்ற மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். சீனா, ஹாங்காங், நெதர்லாந்து உள்ளிட்ட பல உலகின் முன்னணி மருத்துவ ஆய்வு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் இந்த ஆய்வை செய்தனர்.

இதில், காற்றில் அதிகரிக்கும் மாசு காரணமாக சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலின் ஒட்டுமொத்த ஆக்சிஜன் தேவை 20 மடங்கு அதிகரிக்கிறது. உடலின் ஒவ்வொரு தசையும் உடற்பயிற்சி காரணமாக இயங்குகிறது. அந்த நேரத்தில் உடலுக்கு அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது. உடலில் குறிப்பாக கல்லீரலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு சிதைக்கப்பட்டு உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

காற்றில் உள்ள மாசுக்கள் உள்ளே செல்லும்போது அது உடலில் பலவித பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்று மாசு நுரையீரலை மட்டும் பாதிப்பது இல்லை. முழு உடலின் செயல்பாட்டையும் பாதிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த பாதிப்பு குறைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அதன் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற உடற்பயிற்சி நிபுணரின் பரிந்துரை அடிப்படையில் பயிற்சிகள் செய்வது நல்லது. அதீத, கடினமான பயிற்சிகள் உடலில் வேறு வித பாதிப்பை ஏற்படுத்திவிடாமல் இருக்க இதை கவனத்தில் கொள்வது நல்லது!