முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்க மறுப்பு…!

 

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்க மறுப்பு…!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்க மறுப்பு…!

கொரோனா அச்சம் காரணமாக முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து ஆன்லைனில் கலந்தாய்வு கடந்த மாதம் ஆரம்பமாகி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைந்தது. ஆயினும் மத்திய அரசு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திய நிலையில் மருத்துவப்படிப்புக்களுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்க மறுப்பு…!

இதை தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க கூடாது என மத்திய அரசு கூறியதை ஏற்று 15 நாள் அவகாசம் கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.