ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைப்பு

 

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைப்பு

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 9-ம் வகுப்புக்கு 38 சதவீதமும், பாடங்கள் குறைக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் 10-ம் வகுப்புக்கு 39% பாடங்களும்

8-ம் வகுப்பு வரை 40% பாடங்களும் குறைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாட திட்டங்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் பாடங்களை நடத்தவேண்டும், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட இருக்கும் நிலையில், மாணவர்களை மனதளவில் தயார் படுத்தும் வகையில் 45 முதல் 50 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.