மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்த தமிழக அரசு!

 

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்த தமிழக அரசு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்துத் துறைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், தமிழக அரசின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் நிதிநிலைமை மோசமடைந்ததை ஈடு கட்டுவதற்காக பத்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியக் குறைப்புத் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடியை சேமிக்கலாம் என்பது அரசின் நிலைபாடு.

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்த தமிழக அரசு!

அரசு மருத்துவர்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும்போது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டில் ஓய்வூதிய அதிகரிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, அதனால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 1640 பேர் மட்டுமே. இவர்களின் ஓய்வூதியத்தையே அரசு குறைத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், மாதத்திற்கு மாதம் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தக் கரோனா நெருக்கடி காலத்தில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை நியாயமற்றது என ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அது மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.