கொரோனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலை! – பால் முகவர்கள் சங்கம் வேதனை

 

கொரோனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலை! – பால் முகவர்கள் சங்கம் வேதனை

கொரோனா காலத்தைக் காரணம் காட்டி பால் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் மிக்பபெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வேதனை தெரிவித்து;ளளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு 120 நாட்களைக் கடந்து விட்ட சூழலில் தேனீர் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தனியார் நிறுவன கேன்டீன்கள் என பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இன்னும் முழுமையாக இயங்கத் தொடங்கவில்லை. அப்படியே இயங்குபவைகளிலும் பார்சல் மட்டுமே அனுமதி என்கிற நிலை இன்னும் நீடிப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கொரோனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலை! – பால் முகவர்கள் சங்கம் வேதனைஅதன் காரணமாக ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் பாலினை கொள்முதல் செய்ய மறுக்கும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் அரங்கேறி வருவதால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பாலினை வயல்வெளிகளிலும், ஆறு, ஏரி, குளங்களில் கொட்டுகின்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30% முதல் 40% சதவிகிதம் வரை வணிக ரீதியிலான பால் விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருப்பதால் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை தன்னிச்சையாக குறைத்துள்ளன.

கொரோனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலை! – பால் முகவர்கள் சங்கம் வேதனைஆவின் நிறுவனத்தை பொறுத்தவரை தமிழக அரசு பசும்பால் ஒரு லிட்டர் 32.00ரூபாய் என கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஆவின் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அரசின் அனுமதி இன்றி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7.00ரூபாய் முதல் 10.00ரூபாய் வரை குறைத்து வழங்கி, கணக்கில் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கணக்கு காட்டி பால் உற்பத்தியாளர்களுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதே நேரம் தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலினை 32.00 ரூபாய் முதல் 36.00 ரூபாய் வரை கொள்முதல் விலையாக வழங்கி வந்த நிலையில் தற்போது ஒரு லிட்டர் பாலிற்கு சுமார் 15.00 ரூபாய் முதல் 20.00 ரூபாய் வரை வரலாறு காணாத வகையில் கொள்முதல் விலையை குறைத்து ஒரு லிட்டர் பாலினை 16.00 ரூபாய் முதல் 21.00 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கி வருகின்றன.
கொரோனா பேரிடர் காலத்திலும் பால் உற்பத்தியை தங்குதடையின்றி செய்து வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கொடுக்காமலும், பால் கொள்முதல் செய்ய மறுத்தும் வருகின்ற ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலை! – பால் முகவர்கள் சங்கம் வேதனை
மேலும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த கொள்முதல் விலை குறைப்பு காரணமாக பால் உற்பத்தியாளர்கள் மாட்டுத் தீவனங்கள் வாங்கிட இயலாமலும், பால் கறக்கும் கூலி, மாடுகளுக்கான மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்ய முடியாமலும் அல்லல்பட்டு வருகின்றனர்.
எனவே தமிழக அரசு ஆவின் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, தனியார் பால் நிறுவனங்களின் வரலாறு காணாத கொள்முதல் விலை குறைப்பை தடுத்து நிறுத்தி, கரும்பு மற்றும் நெல் போன்ற விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது போல் பால் கொள்முதல் விலைக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

கொரோனாவை காரணம் காட்டி குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலை! – பால் முகவர்கள் சங்கம் வேதனைஅத்துடன் தேனீர் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தனியார் நிறுவன கேன்டீன்கள் உள்ளிட்ட வணிக ரீதியிலான பால் விற்பனை தொடர்பான வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திடவும், கொரோனா பேரிடர் காலமான தற்போது தமிழகம் முழுவதும் விற்பனை போக உபரியாகும் பாலினை ஆவின் பால் பண்ணைகளில் உள்ள பவுடராக மாற்றுவதற்கான வசதியை தனியார் பால் நிறுவனங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.