ரெட்மி 9 மற்றும் 9 பிரைம் அமேசானில் அறிமுகம் – ரியல்மி 7 புரோ பிளிப்கார்டில் அறிமுகம்

 

ரெட்மி 9 மற்றும் 9 பிரைம் அமேசானில் அறிமுகம் – ரியல்மி 7 புரோ பிளிப்கார்டில் அறிமுகம்

ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது.

ரெட்மி 9 மற்றும் 9 பிரைம் அமேசானில் அறிமுகம் – ரியல்மி 7 புரோ பிளிப்கார்டில் அறிமுகம்

ரெட்மி 9 மற்றும் ரெட்மி 9 பிரைம் ஆகிய 2 புதிய போன்கள் அமேசான் மற்றும் எம்ஐ ஆன்லைன் தளத்தில் இன்று (செப்.14ம் தேதி) மதியம் 12 மணிமுதல் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளன. இதில் ரெட்மி 9 போன், 8 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையிலும், ரெட்மி 9 பிரைம் 9 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையிலும் தொடங்குகிறது.

இவை இரண்டுமே 6.5 இன்ச் திரையுடன், ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்குகின்றன, மேலும், 5000 எம்ஏச் பேட்டரியுடன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி என இருவேறு மெமரி அளவுகளில் வெளிவந்துள்ளது.

ரெட் மி 9 போனின் கேமராவை பொறுத்தவரை, பின்புறம் 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்களும், முன்புறம் 5 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது. ரெட் மி பிரைமை பொறுத்தவரை, 13 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல், 5 மற்றும் 2 என மொத்தம் 4 கேமராக்களும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது.

ரியல்மி 7 புரோ

இதனிடையே ரியல்மி நிறுவனத்தின் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் இன்று (செப். 14 ) மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது.

ரெட்மி 9 மற்றும் 9 பிரைம் அமேசானில் அறிமுகம் – ரியல்மி 7 புரோ பிளிப்கார்டில் அறிமுகம்

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இருவகைகளில் வந்துள்ள இந்த புதிய போன் முறையே, 19 ஆயிரத்து 999 மற்றும் 21 ஆயிரத்து 999 என்ற விலைக்கு அறிமுகமாகி உள்ளது.

புல் எச்டி சூப்பர் அமோலெட் திரை, ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், 64 மெகா பிக்சல் சோனி கேமராவுடன், 8, 2, 2 என மொத்தம் நான்கு கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 32 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகமாகி உள்ளது. மேலும், 4500 எம்ஏ எச் பேட்டரியுடன் அறிமுகமாகி உள்ள இந்த போனில் 65 வாட்ஸ் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.முத்துக்குமார்