பலத்த மழைக்கு வாய்ப்பு: கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

 

பலத்த மழைக்கு வாய்ப்பு: கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

கடந்த மாதம் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு: கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

தென்சீனக் கடலில் உருவாகி இருக்கும் நியோல் சூறாவளியால் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாகவும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை பலத்த மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பதனம்திட்டா மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு: கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதால் அமமாவட்டத்தில் இருக்கும் நிலச்சரிவு பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.