வைகை அணையில் மூழ்கிய இளைஞர், 10 மணிநேர தேடலுக்கு பின் சடலமாக மீட்பு

 

வைகை அணையில் மூழ்கிய இளைஞர், 10 மணிநேர  தேடலுக்கு பின் சடலமாக மீட்பு

தேனி

ஆண்டிப்பட்டி அருகே நேற்று வைகை அணைப்பகுதியில் மூழ்கிய இளைஞர், 10 மணிநேர தேடலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள கொண்டம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கௌதம் சர்மா(32). இவர் நேற்று மாலை வைகை அணை அருகேயுள்ள பிக்கப் அணை பகுதியில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கவுதம் நீரில் மூழ்கினார். இதனையடுத்து நண்பர்கள் தேடியும் கௌதம் கிடைக்காத நிலையில், இதுகுறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வைகை அணையில் மூழ்கிய இளைஞர், 10 மணிநேர  தேடலுக்கு பின் சடலமாக மீட்பு

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மாலை முதல் கௌதமை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இரவாகியதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று காலை தீயணைப்புத்துறை மீட்பு குழு வீரர்கள் 13 பேர், அணை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாலை 4 மணி அளவில் கௌதமின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.