முடி கொட்டுதல் பிரச்சினையிலிருந்து மீளலாம்!

தலைமுடி… இது பலருக்கு தலையாய பிரச்சினையாக இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையை மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாக்கும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. முடி உதிர்தல், இளநரை, சொட்டை, வழுக்கை என பல்வேறுவிதமாக பாடாய்ப்படுத்தி வரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதா என்று பலரும் ஏங்கித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.

உடல் – மன நலம்:
தலைமுடி பிரச்சினைக்கு பல்வேறுவிதமான காரணங்கள் இருக்கின்றன. உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் தலைமயிரைப் பாதிக்கின்றன. மனதில் ஏற்படும் கவலை, குழப்பம், மன அழுத்தம் போன்றவற்றாலும் அவற்றால் ஏற்படும் தூக்கமின்மையும்கூட தலைமுடியைப் பாதிக்கின்றன.
தலைமுடியை நம் உடல்நலத்தின் ஓர் அளவுகாட்டி என்கிறார்கள்.

ஜலதோஷம், கிருமிகளின் தாக்குதல், உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்களாலும் தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கும். குறிப்பாக வயிறு மற்றும் குடல் கோளாறுகளின்போது பல நேரங்களில் முடி சீக்கிரம் கொட்டுகிறது.

ஹார்மோன்:
நரம்பு மண்டலங்களில் உள்ள ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளும் மயிரிழப்புக்குக் காரணமாக அமைகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்துக்குள் நுழையும்போது அவர்களுக்குள் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களால் தூக்கமின்மை, கவலை, பயம், வெறுப்பு ஏற்படும். இதேபோல் கர்ப்பமான பெண்களுக்கும் இதே மாற்றங்கள் ஏற்படும். இவற்றாலும் முடி கொட்ட வாய்ப்பு உள்ளது.

ஆண்மை ஹார்மோன்களான ஆன்ட்ரோஜென்களுக்கும் பெண்மை ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென்களுக்கும் இடையேயான சமநிலை கெடுவதாலும் தலைமுடி கொட்டும். அதாவது இந்த ஹார்மோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவோ அல்லது மாற்றத்துக்குள்ளாகி சுரக்கும்போதோ மயிர் அதிகமாகக் கொட்டும். இந்தச் சூழலில்தான் பலருக்கு வழுக்கை விழத் தொடங்குகிறது.

மன அமைதி:
அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளுக்கு மனதை அமைதியாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும். சுத்தமான காற்றுக்கு எங்கே போவது என்று கேட்கலாம். நாம் இருக்கும் இடங்களிலேயே காற்றைச் சுத்திகரிக்கும் மூலிகைகளை வளர்க்கலாம். வீட்டைச் சுற்றிலும் வீட்டின் உள்ளேயும் வளர்ப்பதற்கென்றே ஏராளமான மூலிகைகள் உள்ளன. உதாரணமாக கற்றாழை, மணி பிளான்ட் உள்ளிட்ட மூலிகைகள் வளர்க்கலாம்.

வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உண்ண வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டு, ஓட்டப்பந்தயம, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் என பல்வேறுவிதமான பயிற்சிகளைச் செய்யலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட வேண்டும். வறட்சியான தலைமயிருக்கு சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதற்கு ஷாம்பு பயன்படுத்துவதற்குப் பதில் சீயக்காய் பயன்படுத்தலாம்.

கடினமான நீரில் குளிக்காமலிருப்பது நல்லது. தலைக்கு குளித்ததும் வெளிக்காற்றில் தலையை உலர வைக்க வேண்டும். இதுபோன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே முடி கொட்டுதல் பிரச்சினைகளிலிருந்து மீளலாம்.

Most Popular

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் : பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு மின்னஞ்சல் வாயிலாக பால் முகவர்கள் சங்கம்...

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!- அலறியடித்து ஓடிய மக்கள்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை விட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம்...

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...
Open

ttn

Close