ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 34 வயது மருத்துவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்து உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் மூடப்பட்டது.

coronavirus

இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி அளித்த பேட்டியில், “2 மருத்துவர்கள் மட்டுமே இங்கு பாசிட்டிவ். மிகவும் அபாய கட்டத்தில் இருந்த ஒரு மருத்துவர் உள்ளிட்ட இருவரும் நலம். 2 முறை நெகடிவ் வந்துவிட்டது. செவிலியர் மற்றும் அவரது 10 மாத குழந்தை உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நெகடிவ். மருத்துவமனையில் இருக்கும் 13 டவர்கள் ஒவ்வொன்றாக கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. கார்டியாலஜி துறையில் இப்பணிகள் இன்று நிறைவடைந்ததும் நாளை நியூராலஜி துறையில் இதே போன்ற பணிகள் நடைபெறும். கருவிகளை இடம் மாற்றி சுத்தப்படுத்தி வருகிறோம். இன்றும் கூட கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 5 பேர் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” எனக்கூறினார்.