முதல்வர் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத் திறனாளி மாணவன்!

 

முதல்வர் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத் திறனாளி மாணவன்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான அருண்பிரசாத், 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த வைரஸில் இருந்து மக்களை காக்க முதல்வர் நிவாரண நிதி கேட்டதன் பேரில், பலர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், அவரது சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான அருண்பிரசாத், 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

ttn

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அவர், கோவிலுக்கு செலுத்த சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அருண் பிரசாத்தின் வீட்டுக்கே வந்த அதிகாரிகள்,  அவரிடம் இருந்து ரூ.1076ஐ பெற்றுக் கொண்டு அதனை செக் ஆக மாற்றி முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இதனை பற்றி பேசிய அவர், “இப்போது இருக்கும் இக்கட்டான சூழலில் கோவிலில் வழிபடுவதை விட மக்களுக்கு உதவுவது தான் முக்கியம். அதனால் மக்கள் பலர் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவ முன்வர வேண்டும். அப்படி செய்தால் எத்தகைய சூழலையும் நம்மால் வெல்ல இயலும்” என்று கூறியுள்ளார்.