பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: உயர்நீதி மன்ற கண்காணிப்பில் சிபிஐ…!

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: உயர்நீதி மன்ற கண்காணிப்பில் சிபிஐ…!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இதுவரை சாரியாகத் தான் சென்று கொண்டிருக்கிறது

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையைப் பற்றிய முழு உண்மையைக் கண்டுபிடிக்கவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்க பெண் வழக்கறிஞர் சங்கத்தினர் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், இந்த வழக்கு குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளனர்.

High court

அதற்கு சிபிஐ, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இதுவரை சாரியாகத் தான் சென்று கொண்டிருக்கிறது என்றும் இதுவரை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்துள்ளோம்   என்றும் தெரிவித்துள்ளது. அதனைக் கேட்டுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு குறித்த சிபிஐ விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்றும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு நவம்பர் 4 ஆம் மீண்டும் விசாரிக்கப்படும் என்று வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.