பாத்திமா தற்கொலை வழக்கின் விசாரணை தீவிரம் : கேரளா விரைகிறது தனிப்படை !

 

பாத்திமா தற்கொலை வழக்கின் விசாரணை தீவிரம் : கேரளா விரைகிறது தனிப்படை !

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகள் முதலில் கல்லூரிக்குச் சென்று அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், பாத்திமாவின் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சென்னை வந்திருந்த பாத்திமா தந்தை அப்துல் லத்தீப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பேராசிரியர் ஒருவரை பற்றி பாத்திமா அச்சம் தெரிவித்ததாக அப்துல் அதிகாரிகளிடம் கூறினார். 

fathima

பாத்திமாவின் தந்தை கூறியதை வைத்தும், பாத்திமா செல்போனில் இருந்த தகவல்களை வைத்தும் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேரை ஆஜராகும் படி மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். தற்போது, பேராசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, பாத்திமாவின் செல்போனும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

fathima

இந்நிலையில், இந்த தற்கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளத் தனிப்படையினர் கேரளாவிற்குச் செல்லவுள்ளனர். பாத்திமாவின் நண்பர்கள் தேர்வு விடுமுறை காரணமாகக் கேரளா சென்றுள்ளதால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் பாத்திமாவின் உறவினர்கள், சகோதரி மற்றும் தாயாரிடம் விசாரணை மேற்கொள்ளவும் கேரளா செல்ல திட்டமிட்டுள்ளனர். விரைவில், பாத்திமா தற்கொலையில் இருக்கும் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.