நாளை முதல் மதுபானம் விலை உயர்கிறது: எவ்வளவு தெரியுமா?

 

நாளை முதல்  மதுபானம் விலை உயர்கிறது: எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இதனிடையே தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

tt

இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180மிலி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ,10 கூடுதலாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை 180மிலி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.20 கூடுதலாகவும் 7.5.2020 முதல் உயர்த்தப்படுகிறது ” என்று டாஸ்மாக்  நிறுவனம் தெரிவித்துள்ளது.