நாங்குநேரி இடைத்தேர்தல்: கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டம்!

 

நாங்குநேரி இடைத்தேர்தல்: கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டம்!

திமுக சார்பில் வெ.நாராயணன் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப் படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக சார்பில் வெ.நாராயணன் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

Protest by hoisting flags

இந்நிலையில், நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த 20 கிராம மக்கள் தங்களது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், அந்த கோரிக்கையை நிறை வேற்றாவிடில் இடைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி தலைவர், கிருஷ்ண சாமி தலைமையில் கிராம மக்கள் பட்டியலின பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் வலியுறுத்தியது குறிப்பிடத் தக்கது.