நாகர்கோவில் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது

 

நாகர்கோவில் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது

நாகர்கோவில் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் இன்று  நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது . இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி வரை பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான 10 நாள் திருவிழா இன்று தொடங்குகிறது.

nagarkoil

இதையொட்டி இன்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் சார்பில் திருப்பலி நிகழ்வும் மாலை 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

திருவிழாவின்  2-வது நாளான நாளை காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும்,11 மணிக்கு இறை இரக்கத் தூதுவர் குழுவினர் நிறைவேற்றும் அற்புத குணமளிக்கும் திருப்பலியும்,மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.

nagar2

இதேபோல் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

வருகிற 30-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் நிறைவேற்றி, மறையுரையாற்றுகிறார்.

இதனைஅடுத்து திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது.

nagar4

அதை தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.