தோழி ராதிகாவுக்கு கொரோனா! கமல்ஹாசன் வேதனை

 

தோழி ராதிகாவுக்கு கொரோனா! கமல்ஹாசன் வேதனை

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தலை தூக்கியுள்ளது. அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார்.

தோழி ராதிகாவுக்கு கொரோனா! கமல்ஹாசன் வேதனை

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன்.

4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட” எனக் குறிப்பிட்டுள்ளார்.