தயவு செய்து நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! மேடையில் பேசாதீர்கள்! நடிகர் விஜய்க்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்

 

தயவு செய்து நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! மேடையில் பேசாதீர்கள்! நடிகர் விஜய்க்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்

தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம் என நடிகர் விஜய்க்கு இயக்குநர் சாமி அறிவுரை கூறியுள்ளார். 

தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம் என நடிகர் விஜய்க்கு இயக்குநர் சாமி அறிவுரை கூறியுள்ளார். 

தமிழில் மிருகம், சிந்துசமவெளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாமி,  விஜய்க்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேம். நாம் இருவரும் 4 முறை மட்டுமே சந்தித்துள்ளோம். பிரியமானவளே பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக 2 மணி நேரம் ஒதுக்கினீர்கள்

Vijay
நீங்கள் ரஜினிகாந்த் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்க. வாய் திறந்து பேசாதீங்க பிளீஸ். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசுகிறீர்கள். யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும் என்று. இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதன்பின் டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்தேன். நீங்கள் ஒரு படத்தில் 60 நாட்கள் மட்டுமே நடிக்கீறீர்கள். ஆனால் சம்பளமாக 50 கோடி ரூபாய் வாங்குகீறிர்கள். இன்னும் எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும். ஒருநாள் உங்கள் உண்மை முகம் தெரியவரும்.

நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போகவும். வெளியில் கருத்து எல்லாம் சொல்லாதீர்கள். தயவு செய்து இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்…” என அறிவுறுத்தியுள்ளார்.