சைரா நரசிம்மா ரெட்டி படம் பார்க்க தமிழிசையை அழைத்த சிரஞ்சீவி!

 

சைரா நரசிம்மா ரெட்டி படம் பார்க்க தமிழிசையை அழைத்த சிரஞ்சீவி!

டோலிவுட் நகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சிரஞ்சீவி, சைரா நரசிம்மா ரெட்டி படம் பார்க்க வருமாறு தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார். 

டோலிவுட் நகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சிரஞ்சீவி, சைரா நரசிம்மா ரெட்டி படம் பார்க்க வருமாறு தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார். 

தமிழ் சினிமாவில் வரலாற்றுப் படங்களுக்கு என்றே ஒரு தனி வரவேற்பு உள்ளது. ஆனால் அப்படிப் பட்ட படங்கள் மிக குறைவாகவே வெளியாகிறது. ஆனால் அப்படி வரும் படங்கள்  கண்டிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.  அந்த வகையில்  சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது சைரா நரசிம்மா ரெட்டி.

Tamilisai

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், தமன்னா, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியுள்ள இப்படத்தை பார்க்க வருமாறு நடிகர் சிரஞ்சீவி, தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.