சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

 

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

சென்னை- சேலம் எட்டு 8 வழிச்சாலை திட்டம் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எட்டு வழி சாலை அமைக்க ஆயிரத்து 900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் எட்டு வழிசாலை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த ஆணைகளைக் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்ட இயக்குநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு முதல் நடந்துவரும் இந்த விசாரணையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது . சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதி, நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.