சுபஸ்ரீ மரணம்: ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கப் படுமா?!

 

சுபஸ்ரீ மரணம்: ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கப் படுமா?!

பேனர் வைத்த அதிமுக பிரமுகரைக் கைது செய்யும் படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

கடந்த மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சென்னை பள்ளிக் கருணையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது சாலையின் அருகே விதி மீறி வைக்கப் பட்டிருந்த பேனர் தவறி விழுந்ததால், லாரி மீது பொது பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பேனர் வைத்த அதிமுக பிரமுகரைக் கைது செய்யும் படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

Subasree death

இதனையடுத்து ஜெயகோபாலை சரணடையக் கூறி காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதிலிருந்து தலைமறைவான ஜெயகோபாலை 14 நாட்கள் கழித்து கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் வைத்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவருடன் சேர்த்து அவரது உறவினர் மேகநாதனையும் கைது செய்தனர். இருவரையும்  11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது. 

Jeyagopal

இந்நிலையில், மேகநாதனும் ஜெயகோபாலும் ஜாமீன் தரக் கோரி செங்கல்பட்டு நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப் பட உள்ளது. 

 சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணமான ஜெயகோபாலுக்கும் மேகநாதனுக்கும் ஜாமீன் அளிக்கப் படுமா அல்லது அவர்களின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்படுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.