சமூக வலைத்தளத்திற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது?!: உயர் நீதி மன்றம் கேள்வி.

 

சமூக வலைத்தளத்திற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது?!: உயர் நீதி மன்றம் கேள்வி.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும், தவறான கருத்துகள் பரவுவதை தடுக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல் படுத்தப் போவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துளளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

சமூக வலைத்தளங்களால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு தீமையும் இருக்க தான் செய்கிறது.கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, அவரவருக்கென தனித் தனி கணக்குகள் ஆரம்பித்து உபயோகப் படுத்தி வருகின்றனர். இதன் மூலம், தவறான கருத்துகளும் பரவி வருகின்றன. 

Social websites

சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றைத்தை தடுக்க அனைத்து சமூக வலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளெமெண்ட் ரூபின் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து பரவுவதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், வாட்ஸ்சாப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூறியது. அதனை நிராகரித்த நீதி மன்றம், டி.வி போன்ற காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த அமைப்புகள் இருப்பதை போல சமூக வலைத்தளங்களுக்கு எந்த கட்டுப்பாடு அமைப்பு உள்ளது என்று கேள்வி எழுப்பியது. 

Cyber crime

மேலும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும், தவறான கருத்துகள் பரவுவதை தடுக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல் படுத்தப் போவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துளளதாக தகவல்கள் வெளியாகின்றன.