கொரோனாவால் உயிரிழந்தவருக்கு நெஞ்சுவலி சான்றிதழ் : சத்தமில்லாமல் உடலை புதைத்த குடும்பம்!

 

கொரோனாவால் உயிரிழந்தவருக்கு நெஞ்சுவலி சான்றிதழ் : சத்தமில்லாமல் உடலை புதைத்த குடும்பம்!

மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அவர் ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே இறந்துள்ளார். 

சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான  95 வயது முதியவர்  கடந்த 13ம் தேதி நெஞ்சு சளி மற்றும் இருமல் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே அது சாதாரண காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம் என அங்குள்ள மருத்துவர்கள் கூற அவர் அடுத்த நாள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு குடும்பத்தினரால்  அழைத்து செல்லப்பட அங்கோ, சென்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அவர் ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே இறந்துள்ளார். 

TTN

இதையடுத்து உயிரிழந்த முதியவரின் உறவினர்கள் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மருத்துவர் மணிவண்ணனிடம் இவர் நெஞ்சுவலியால் இறந்தது போன்று சான்றிதழ் பெற்று இறந்தவரை அடக்கம் செய்துள்ளனர்.

TT

இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் பரிசோதனை முடிவு நேற்று முன்தினம்  வந்துள்ளது. அதில் இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இறந்த முதியவரின் மகன் டெல்லி மாநாடுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து  உடனடியாக முதியவரின் மகன், பேரன் ஆகியோர்   மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்டனர். 

மேலும் இறந்த முதியவருக்கு நெஞ்சுவலியால் இறந்தது போன்று சான்றிதழ் வழங்கிய சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மருத்துவர் மணிவண்ணனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.