கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி தொடக்கம்…

 

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி தொடக்கம்…

மதுரை, சிவகங்கையில் நடைபெற்று வந்த ஐந்தாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

மதுரை, சிவகங்கையில் நடைபெற்று வந்த ஐந்தாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்த அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன.

Keezhadi

இந்த அகழ்வாராய்ச்சி,  அக்காலத்திலிருந்த மக்கள் நீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து இருந்ததும், எழுத்தறிவு பெற்றிருந்ததும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பதும் இக்காலத்து மக்களை வியப்பில் ஆழ்த்தியது. 

Keezhadi

கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தையும், கீழடியிலேயே காட்சிப் படுத்த அரசு ரூ.10 கோடி செலவில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த கண்காட்சியைத் துவங்கக் கால தாமதம் ஆகும் என்பதால் தற்காலிக கண்காட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டது. அந்த கண்காட்சியை இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இன்று முதல், மக்கள் அனைவரும் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதுரையில்  காணலாம்.