எங்களுக்கும் குழந்தை வேண்டும்.. தத்தெடுக்க உரிமை தாருங்கள்: திருநங்கைகள் கோரிக்கை!

 

எங்களுக்கும் குழந்தை வேண்டும்.. தத்தெடுக்க உரிமை தாருங்கள்: திருநங்கைகள் கோரிக்கை!

திருநங்கை ஒருவர், திருநங்கைகளின் திருமணம் சட்டப் படி ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்றும், பெயர்மாற்றம் செய்வதை எளிதாக மாற்ற வேண்டும் என்றும், குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமைகள் திருநங்கைகளுக்கும் வழங்கப் பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

திருநங்கைகளை, அரசு 3 ஆவது பாலினமாக அறிவித்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் உரிமைகைகளும் சாதாரண மக்களுக்கு அளிப்பது போல இல்லை. நிறைய திருநங்கைகள் படித்து பல துறைகளில் சாதித்து உள்ளனர். ஆனாலும், சில மக்களால் அவர்களுக்கு இழைக்கப் படும் அநீதி ஏராளம். பொது இடங்களில் கேலி செய்வது, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தராமல் புறக்கப்பணிப்பது போன்ற பல இன்னல்களை திருநங்கைகள் தினம் தினம் எதிர்க் கொண்டு தான் இருக்கின்றனர். 

Transgenders

இந்நிலையில், தஞ்சாவூர் நீதி மன்றத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய கட்டிடத்தில் நேற்று திருநங்கைகளுக்கான பிரச்சனை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய மாவட்ட செயற்குழு ஆணையர், சார்பு நீதிபதி சுதா மாற்று திறனாளி குழந்தைகளை ஏற்றுக் கொள்வது போல இவர்களையும் குடும்பங்கள் ஏற்று கொள்ள வேண்டும், இவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழக்கப் பட வேண்டும் மேலும் அரசு வேலை வாய்ப்புகளும் வழங்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

Transgenders

மேலும், கருத்தரங்கத்தில் பேசிய திருநங்கை ஒருவர், திருநங்கைகளின் திருமணம் சட்டப் படி ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்றும், பெயர்மாற்றம் செய்வதை எளிதாக மாற்ற வேண்டும் என்றும், குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமைகள் திருநங்கைகளுக்கும் வழங்கப் பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.