உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்? 

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்? 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது  டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரம் வெளியே வருவது உறுதியாகிவிடும். 

ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் 2017 ஆம் ஆண்டு , விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ ப.சிதம்பரத்தின் மீது பதிவு செய்தது. 2018 ஆம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை திகார் சிறையில் அடைத்தது. மேலும் சிதம்பரத்தின் ஜாமின் மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டுவருவதுடன், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் அவருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டு இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலனை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

p chidambaram

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது  டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரம் வெளியே வருவது உறுதியாகிவிடும். வெளியே வந்தால் ப.சிதம்பரம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.