இனிமேல் சில்லறை விநியோகம் இல்லை.. பால் முகவர்களின் கடைகளில் மட்டுமே விற்பனை!

 

இனிமேல் சில்லறை விநியோகம் இல்லை.. பால் முகவர்களின் கடைகளில் மட்டுமே விற்பனை!

பால் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸின் தீவிரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பால், மளிகை உள்ளிட்ட  அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பால் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. 

ttn

இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்திருந்தும் பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள்  செயல்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அரசின்  உத்தரவை கடைபிடிக்காமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர்.  அதன் காரணமாக போலீசார் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் பால் வியாபாரிகள் சில்லறை விநியோகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

ttn

அதனால் சில்லறை வியாபாரிகளுக்கு பால் விநியோகம் செய்யப்பட போவதில்லை என்றும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலர் பால் முகவர்கள் என்று கூறி அதிக  விலைக்கு பால் விற்பனை செய்வதாக முடிவு தகவல் கிடைத்துள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ தெரிவிக்கபட்டுள்ளது.