தொழிலதிபரான இன்ஜினியரிங் பட்டதாரி… கனவை நனவாக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி மழை பொழிந்த இளைஞர்!

தொழிலதிபரான இன்ஜினியரிங் பட்டதாரி… கனவை நனவாக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி மழை பொழிந்த இளைஞர்!

சென்னை மறைமலை நகரில் கார்த்திகேயன் சண்முகம் என்ற இன்ஜினியரிங் பட்டதாரி வசித்து வருகிறார். இவருக்கு பெரிய அளவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே கனவு. முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களால் தனது கனவு நிறைவேறியுள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இவர் தற்போது பிபிஇ கிட் (PPE-Kit) தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை ஒன்றை தண்டரை தொழிற்பேட்டையில் அமைத்து வருகிறார்.

தொழிலதிபரான இன்ஜினியரிங் பட்டதாரி… கனவை நனவாக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி மழை பொழிந்த இளைஞர்!
சிறு குறு தொழில்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய கார்த்திகேயன் சண்முகம் “கொரோனா பெருந்தொற்று எதிராகப் போராட மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு சலுகை அளித்து முதலமைச்சர் அறிவித்திருப்பது பற்றி தெரியவந்தது. 30 சதவீத மானியமும் முதலீடு செய்த பணத்தில் 6 சதவீத வட்டியும் உதவி தொகையாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபரான இன்ஜினியரிங் பட்டதாரி… கனவை நனவாக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி மழை பொழிந்த இளைஞர்!

எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சாலை அமைக்க இலவசமாக பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் வரையில் தயாரிக்கப்பட்ட பிபிஇ கிட்கள் 50 சதவீதத்திற்கும் மேல் அரசே நேரடியாக வாங்கிக்கொண்டனர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து நான் தண்டறக்கரை தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலை அமைக்க விண்ணப்பித்திருந்தேன். மூன்று நாட்களுக்குள் எனக்கு அனுமதி வழங்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டன. இதனால் தொழிலதிபராக வேண்டும் என்ற எனது கனவு நனவானது. தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. விரைவில் பிபிஇ கிட்கள் தயாரிக்கப்பட உள்ளன.

தொழிலதிபரான இன்ஜினியரிங் பட்டதாரி… கனவை நனவாக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி மழை பொழிந்த இளைஞர்!
இதற்காக நான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். பிபிஇ கிட் தொழிற்சாலை தொடங்க எனக்கு அனுமதி அளித்ததற்கு சிறுதொழில் வளர்ச்சி கழகத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.