மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?

தமிழ்நாட்டில் எப்போதும் சட்ட ஒழுங்கிற்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படும். அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் சட்ட ஒழுங்கு காவல் துறையினர்கள் தான். அந்தக் காவலர்களை தன்னுடைய கன்ட்ரோலில் வைத்திருக்கும் காவல் துறை தலைவர் தான் டிஜிபி (Director General of Police) என்றழைக்கப்படுகிறார். இதனால் தான் இந்தப் பதவி முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியில் இருப்பவர்களும் விவிஐபிக்களாக கருதப்படுகின்றனர்.

\

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?

தமிழ்நாட்டில் காவலராகக் கூடிய எந்தவொரு காவலரிடமும் சென்று உங்கள் ஆசை என்னவென்று கேட்டால் தயங்காமல் டிஜிபி ஆக வேண்டும் என்றே சொல்வார்கள். அந்தளவிற்கு காவல் துறையில் உச்சபட்ச அதிகாரம் படைத்த பதவியாக டிஜிபி பதவி இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். தற்போது திரிபாதி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஆனால் நாளையோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. இச்சூழலில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தாலும், தேர்ந்தெடுப்பதற்கான பணியைக் கிட்டத்தட்ட அரசு முடித்துவிட்டது.

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?

இதற்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய தேர்வாணையத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மிக முக்கியமாக தலைமைச் செயலர் இறையன்பு டெல்லி சென்று கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக டிஜிபி பதவிக்கு தகுதியான 11 அதிகாரிகளின் பட்டியலை மத்திய தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது.

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?

கூட்டத்தில் கலந்துரையாடி இறுதியாக 11 பேரில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை மத்திய தேர்வாணையம் பரிந்துரைத்திருக்கிறது. அந்த மூவரில் யாரோ ஒருவரை தான் முதலமைச்சர் ஸ்டாலின் செலக்ட் செய்ய போகிறார். இறையன்பு எடுத்துவந்த அந்த மூவரின் பெயர்கள் என்ன? யாருக்கு உச்சபட்ச பதவியான டிஜிபி பதவி கொடுக்க போகிறார் ஸ்டாலின். The ball is now on CM MK Stalin’s court.

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?

தலைமைச் செயலர் கொண்டுவந்த பட்டியலில் முதலில் இருப்பவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ். இவருக்கு திமுக மத்தியில் நல்ல பெயர் இருப்பதாலும் ஸ்டாலின் இவரை தான் டிக் அடிக்கப் போவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது ரயில்வே துறை டிஜிபியாக பணியாற்றி வருகிறார். சீனியாரிட்டி படி பார்த்தாலும் பாபுவே முதலிடத்தில் வருகிறார். இவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெறுவதால் ஓராண்டுக்கு இவரது கன்ட்ரோலில் காவல் துறையை விட இவரையே முதலமைச்சர் தேர்ந்தெடுப்பார் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?
கரன் சின்ஹா

இருப்பினும் அடுத்தடுத்த இடங்களில் யார், யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். அடுத்த இடத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக உள்ள கரன் சின்ஹா வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வுபெற உள்ளார். சைலேந்திர பாபுவுக்கு டஃப் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா இருக்கிறார். இவர் அயல் பணியில் உள்ளார்.

மத்திய அரசு கொடுத்த லிஸ்ட்… யார் அடுத்த தமிழக டிஜிபி… முதல்வர் ஸ்டாலின் மனதில் யார்?
டிஜிபி திரிபாதி பின்னால் நிற்பவர் சஞ்சய் அரோரா

இவருக்கு 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பதவிக்காலம் இருக்கிறது. சஞ்சய் அரோரா நேர்மையான அதிகாரி என்று சொல்லப்பட்டாலும் அவருக்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றன. வருங்காலங்களில் அவருக்கு டிஜிபி பதவி வழங்கப்படாலாம் என்று கூறப்படுகிறது. சைலேந்திர பாபுவுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஸடாலின் மனதில் யார் என்ற கேள்விக்கு இன்றோ நாளையோ தெரியவரும்.