எருது விடும் நிகழ்ச்சியில் மேற்கூரை இடிந்து 8 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி!

எருது விடும் நிகழ்ச்சியில் மேற்கூரை இடிந்து 8 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி!

எருது விடும் நிகழ்ச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து 8 வயது சிறுமி உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எருது விடும் நிகழ்ச்சியில் மேற்கூரை இடிந்து 8 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி!

கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி அருகே எருதுவிடும் விழா நடந்து கொண்டிருந்தது. இதை பார்க்க ஏராளமான மக்கள் கூடிய நிலையில் சிலர் உயரமான இடங்களிலும் ஏறி நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சிலர் வீட்டின் கூரை மீது ஏறி நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்தது . மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 2 பேர் பலியாகினர். அத்துடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற் கூரையின் மேல் அமர்ந்தவர்கள், கீழே நின்று கொண்டு வேடிக்கை பார்த்தவர்களும் இந்த விபத்தில் காயம் அடைந்தது தெரியவந்தது.

எருது விடும் நிகழ்ச்சியில் மேற்கூரை இடிந்து 8 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி!

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பனஹள்ளி போலீசார் விபத்தில் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வேப்பனப்பள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.