பழனி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

 

பழனி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

திண்டுக்கல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு தெய்வானையை மணமுடித்து வைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனையொட்டி, சண்முகர் – வள்ளி மற்றும் தெய்வானைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பழனி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

தொடர்ந்து மலைக்கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார் பதி, பழனி டிஎஸ்பி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் நிர்வாகம் சார்பில் சமூக ஊடகங்களில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது