சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு கொரோனா? – வழக்கறிஞர்கள் அதிர்ச்சி

 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு கொரோனா? – வழக்கறிஞர்கள் அதிர்ச்சி

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால்தான் வீட்டில் இருந்தே வழக்குகளை மற்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றமும் மூடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரித்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி முதல் நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தங்கள் அறைகளுக்கு வந்து வழக்குகளை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் விசாரித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு கொரோனா? – வழக்கறிஞர்கள் அதிர்ச்சிஇந்த நிலையில் மூன்று நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த ஒரு உறுதி செய்யப்பட்ட செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், இதன் காரணமாகத்தான் நீதிபதிகள் இனி நீதிமன்றங்களுக்கு வராமல், தங்கள் வீடுகளில் இருந்தே விசாரிப்பார்கள் என்ற உத்தரவு வெளியாகி உள்ளது என்று கூறப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், இனி இரண்டு நீதிபதிகள் கொண்ட இரு அமர்வுகளும் நான்கு தனி நீதிபதிகளும் தங்கள் வீடுகளில் இருந்தே வழக்கை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் விசாரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் மூத்த வழக்கறிஞர்கள், முன்னணி வழக்கறிஞர்கள் வழக்குகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதனால் மற்ற வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். வருமானம் இன்றி அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வழக்கறிஞர்கள் நேரில் வந்து வாதாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அறிவிப்பால் சென்னை, புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.