வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரம்: முதல்வர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டி.டி.வி.வலியுறுத்தல்

 

வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரம்: முதல்வர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டி.டி.வி.வலியுறுத்தல்

கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக செய்தி வரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியாவது காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரம்: முதல்வர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டி.டி.வி.வலியுறுத்தல்இது தொடர்பாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் அறிக்கையில், “கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் படிப்பதற்குச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் கொரோனா பாதிப்பால் அங்கே சிக்கித்தவிப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. இவர்களைப்போன்றே தமிழகத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலையின்றியும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர்.

வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரம்: முதல்வர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டி.டி.வி.வலியுறுத்தல்
வெளிநாடுகளில் தவிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று தொடக்கம் முதலே கூறப்பட்டு வரும் புகார்களை தமிழக முதல்வர் இப்போதாவது காது கொடுத்து கேட்க வேண்டும்.

http://

வெளிநாடுகளில் தவித்துவருபவர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து செய்யவேண்டிய இப்பணியில் பழனிசாமி அரசும், அதிக எம்.பிக்களை வைத்திருக்கும் தி.மு.கவும் பொறுப்பைத்தட்டிக்கழிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது” என்று கூறியுள்ளார்.