கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு : மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்!!

 

கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு : மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக போலீசாரிடம் மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் 5 வருடம் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அத்துடன் தனது புகாரில் மணிகண்டனால் தான் மூன்று முறை கருவுற்று கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு : மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்நிலையில் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால்தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது சிகிச்சை அளித்ததாகவும் அடையாறு மகளிர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு : மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்த சூழலில் நடிகையுடன் தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலில் மணிகண்டன் தங்கி இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. நடிகையுடன் மணிகண்டன் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.சாதாரண இரண்டு போன்கள் மட்டுமே கைப்பற்றப்பட்ட நிலையில் மணிகண்டனின் ஸ்மார்ட் போனை பறிமுதல் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது.