‘போலீஸ் வாகனத்தில் வந்து’.. ஆசிரியரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்ட கும்பல்.. தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!

‘போலீஸ் வாகனத்தில் வந்து’.. ஆசிரியரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்ட கும்பல்.. தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!

சென்னையைச் சேர்ந்த நீதிமணி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதில் பல ஆசிரியர்கள் ஏஜெண்ட்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தாமலும் வட்டி தராமலும் மோசடி செய்து விட்டதாக நீதிமணி, ஆனந்த் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சென்னையில் முதலீடு செய்தவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘போலீஸ் வாகனத்தில் வந்து’.. ஆசிரியரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்ட கும்பல்.. தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!

இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் உச்சிப்புளி வட்டாரத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ரோக்கிய ராஜ்குமார் என்பவர் தனக்கு தெரிந்தவர்களை முதலீடு செய்ய வைத்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி இரவு போலீஸ் வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், இவரை கடத்தி தாங்கள் போலீஸ் என்று கூறி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவரை ராமேசுவரம் சாலை போக்குவரத்து நகர் பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். இது தொடர்பாக கேணிக் கரை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.