“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வணிகர்களை நேரடியாக அழைத்து ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கேட்டு வருகிறோம். அந்தக் கருத்துக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 15 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விரிவிதிப்பு விதிவிலக்குகளை மாநில நிதியமைச்சர் கேட்டுள்ளார்.

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிவிலக்கு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியதால், 18 சதவீதமாக இருந்த வரி விதிப்பு தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் முடிந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.