“இந்திய அளவில்” கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்.. முக்கிய தகவல்கள் இதோ!

 

“இந்திய அளவில்” கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்.. முக்கிய தகவல்கள் இதோ!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வருவதாகவும் விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த கொடிய நோயான கொரோனாவை விரட்டியடிக்க அரசு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐஎம்சிஆரும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்திய அளவில் முன்னிலையில் நீடிக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

“இந்திய அளவில்” கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்.. முக்கிய தகவல்கள் இதோ!

  • இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 34,32,025 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 135 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுடன் இந்திய அளவில் முன்னிலையில் இருப்பது தமிழகம் தான். அதே போல, கொரோனா பரிசோதனையில் முன்னிலையில் இருக்கும் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 12 ஆம் தேதி 71,575 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை ஐசிஎம்ஆர் உறுதிப்படுத்தியுள்ளது.

“இந்திய அளவில்” கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்.. முக்கிய தகவல்கள் இதோ!

  • கொரோனாவுக்கான சந்தேகங்களை தெளிவுப்படுத்தும் இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் இதுவரை 44,000க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இதிலும் தமிழகம் தான் முதலிடம்.
  • இந்திய அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். அதாவது 81.4% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையும் நம் நாட்டில் தான் அதிகம்.
  • தமிழகம் அதிகபட்ச உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. 1,29,122 படுக்கைகளும், 2882 வென்டிலேட்டர்களும் தமிழக மருத்துவமனைகளில் இருக்கின்றன. அதே போல பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்ட மாநிலங்களுள் தமிழகம் தான் முன்னிலையில் இருக்கிறது.

இத்தகைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு தான் தமிழகத்தில் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.