தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி; எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

 

தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி; எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

தங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. கருவடிக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளாக மாற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோரின் குறைபாடுகள் சரி செய்யப்படும். ஏழைகள் சிகிச்சை பெற அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும் என்றார்.

தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி; எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட எம்எல்ஏக்கள் தடுப்பூசி முகாம்களை முன்னெடுத்து நடத்த வேண்டும். கட்சி எல்லைகளை தாண்டி தங்களது தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யவேண்டும். மக்களைப் பாதுகாக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தடுப்பூசி போடாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்/ தடுப்பூசி செலுத்தாதவர்களே ஐசியூவில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.